Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கரூர் அடுத்துள்ள ஜெகதாபி தெற்கு காலனி சேர்ந்தவர் நிவேதா இவரது கணவர் முருகேசன் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நாலு வருடம் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஹரிஹரன் என்ற ஒன்றை வயது ஆண் குழந்தை உள்ளது இந்நிலையில் முருகேசன் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து நிவேதாவை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது .

இதனால் நிவேதாவிற்கும் முருகேசன் இடையில் பிரச்சனை ஏற்பட்டு தற்பொழுது 6 மாத காலமாக நிவேதா தனியாக தன் கை குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் முருகேசன் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக அறிந்த நிவேதா வாழ்க்கையில் வெருப்படைந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு ப்ளாஸ்க்கில்

பெட்ரோலை நிரப்பி அதனை மறைத்து வைத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு வந்த நிவேதா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் தன் கை குழந்தையின் மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தீயணைப்புத் துறையினர் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள் இந்த சம்பவம் குறித்து நிவேதாவிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!