கனடாவின் டொராண்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது காதலன் அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை 7 மாதங்களுக்கு பிறகு போலீசார் வேறு நாட்டில் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
