திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 51 ). இவர் தன் மகன் ஆதித்யாவுடன் இருந்து வந்தார் இந்த நிலையில் ராஜேஸ்வரி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டார் தொடர்ந்து நேற்று ஆதித்யா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார் வெகு நேரமாக வீட்டின் கதவை அவரது தாய் ராஜேஸ்வரி திறக்காமல் இருந்தார் இதனால் சந்தேகம் அடைந்த ஆதித்யா உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகையை அடமானம் பெற்றுக் கொண்டு திரும்ப தராமல் மோசடி– வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவரது மனைவி சுமதி (40). இவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது பிள்ளைகளின் கல்வி செலவிற்காக தனது இரண்டே கால் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கண்டோன்மென்ட பகுதியில் உள்ள அரசு வங்கியில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வசந்த ராஜ் ( 32 ) என்பவரது வங்கி கணக்கு வாயிலாக அடமானம் வைத்தனர். தொடர்ந்து கடந்த 2025 ஆம் ஆண்டு நகையை மீட்க ரூபாய் 43 ஆயிரத்தை அந்த வங்கியின் கணக்கு வைத்துள்ள வசந்த ராஜிடம் கொடுத்தனர் ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வசந்த ராஜ் இது நாள் வரை நகையை திரும்ப ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் இது குறித்து கண்ட்ரோல்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து வசந்த ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
