தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் அமக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இது போன்று, அமைந்தகரை, கொரட்டூர் புத்தகரம், பெரியமேடு கண்ணப்பர் திடல், திருவெற்றியூர் நெடுஞ்சாலை நான்கு இடங்களில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. இதைத் தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் விரைவில் முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட உள்ளது
