Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு…

திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) இவர் அந்தப் பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 21 ந் தேதி வீட்டில் இருந்த ரமேஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 26ந்தேதி சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!