Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற மூதாட்டி அதிரடியாக கைது

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி.. கருமண்டபத்தில் சம்பவம்

திருச்சி கருமண்டபம் சக்தி நகரை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகர் (49) . இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாதமாக தனியாக வசித்து வந்தார். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த டோமினி பிரபாகர் சம்பவத்தன்று தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!