Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டுக்குள் சடலமாக கிடந்த தொழிலாளி… திருச்சி க்ரைம்

வீட்டுக்குள் சடலமாக கிடந்த தொழிலாளி

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த நிஷா பேகம் (வயது 28) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பள்ளியின் கோடை விடுமுறை நாளில் நிஷா பேகம் தனது தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் சென்று விட்டார். இதையடுத்து கடந்த 5 ந்தேதி அன்று முபாரக் அலி கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் மதுபோதையில் கீழே விழுந்துள்ளார். இதில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனை செல்லாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் கடந்த 6 ந் தேதி அன்று நிஷா பேகம் தனது கணவரின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு வந்து பார்த்தபோது முபாரக் அலி இறந்த நிலையில் கடந்த கிடந்துள்ளார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ25 லட்சம் மோசடி

திருச்சி கீழ புலிவார்டுரோடு பகுதியை சேர்ந்த வேர் சண்முகம் (வயது 60 ) சம்பவத்தன்று இவருக்கு சீனிவாசன் அவரது மனைவி மற்றும் பரமசிவன் ஆகிய மூன்று பேர் நண்பர்களாக அறிமுகமானார்கள். இதையடுத்து சண்முகம் தனது மகன் வேலையில்லாமல் இருப்பதாகவும், அதனால் கஷ்டப்படுவதாகவும் இவர்களிடம் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர்கள் எங்களுக்கு ரெயில்வேயில் அதிகாரிகள் தெரியும் என்றும், நாங்கள் அவர்களிடம் பேசி உங்கள் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகவும்,
ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய சண்முகம் அவர்களிடம் ரூ 25 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அவர்கள் வெகு நாட்களாகியும் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகம் இதுகுறித்து கோட்டை குற்றப் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!