திருச்சி: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https:// awards.tn.gov.in என்ற தளத்தில் வரும்
31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-213796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

