தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி குறித்தும், அக்கட்சிக்குத் தாவியவர்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெகவுக்குச் சென்றவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்துச் செய்தியாளர்களின் கேள்விக்குச் பதிலளித்தார். அப்போது, மாற்று கட்சிகளில் இருந்து தவெகவுக்குத் தாவியவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற கோணத்தில் அவர் பேசினார். தவெகவுக்குத் தாவியவர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் விமர்சித்துள்ளார்.
