Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு உதவி மையம்… 1098 தொடர்பு கொள்ளலாம்.. அரியலூர் கலெக்டர்

குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு-1098 தொடர்பு கொள்ளலாம்

அரியலூர்…

குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சனைகளுக்கு உதவி மையம் எண்.1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் … மாவட்ட ஆட்சித்தலைவர்
ந.மிருணாளினி தகவல்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

அந்தவகையில், குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியான “குழந்தை திருமணம் என்பது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு தீய செயலாகும். இது பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை தடுத்து, அவர்களின் கல்வி கனவுகளை நோக்கிச் செல்லுவதற்கு தடையாகவும் உள்ளது. எனவே நான் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன். என் குடும்பம், சுற்றுப்புறம் மற்றும் சமூகத்தில் குழந்தை திருமணம் நடைபெறாதபடி உறுதி செய்வேன். குழந்தை திருமணம் நடைபெறுவதாக முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிந்தால் உடனடியாக புகாரளித்து மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்காக நான் என்றும் போராடுவேன். குழந்தை திருமணம் இல்லாத அரியலூர் மாவட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சனைகள் உதவி மைய எண்களான குழந்தைகள் பிரச்சனைகள் -1098, பெண்கள் பிரச்சனைகள்-181, பெண்களுக்கான ஆலோசனை-104, சைபர் கிரைம்-1930, முதியோர்களுக்கான பிரச்சனை -14567 உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தின் மேற்கூரைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்க இணைப்பு (column expansion joint) சீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!