Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார்.தற்பொழுது வேலை ஏதும் இல்லாமல் உள்ளார். இவர் இன்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அண்ணா

சிலை அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறினார் இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினர்  பாலுவை சமாதானம் செய்து கீழே இறங்கி வர வற்புறுத்தினர். ஆனால் பாலு கீழே இறங்கி வராததால் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் மேலே ஏறி பாலுவை சமாதானம் செய்து பத்திரமாக கீழே இறக்கினர்.

அப்போது பாலு குடிபோதையில் இருந்ததும் குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி உள்ளார் என போலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!