Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளிக்குள் மாணவியை மின்சார ரம்பத்தால் தாக்கிய இளைஞர்!

பள்ளிக்குள் மாணவியை மின்சார ரம்பத்தால் தாக்கிய இளைஞர்!

அமராவதி: காதலை நிராகரித்ததால் 21 வயது நிரம்பிய இளைஞர் அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியின் முகத்தை மின்சார ரம்பம் கொண்டு வெட்டிய கொடூர சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சனிக்கிழமை காலை பாடம் நடந்துகொண்டிருந்தபோது, ​​21 வயது இளைஞர் ஒருவர் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியை மரம் வெட்டும் இயந்திரத்தால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட சக மாணவர்கள் பயத்தில் அலறி சத்திமிட்டுக்கொண்டிருந்தபோது, சக மாணவி ஒருவர் அந்த நபரை தடுத்து, மாணவியை காக்க முற்பட்டுள்ளார். இதனால் அந்த மாணவிக்கும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிய நிலையில், படுகாயம் அடைந்த மாணவிகளை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்குவந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாணவியை தாக்கிய இளைஞர் தர்மவரம் ரயில் நிலையம் அருகே காவல்துறையிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவரின் பெயர் ஹேமந்த் (25) என்பதும், அந்த மாணவியின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்தது.

மேலும், மாணவியை ஒருதலையாக காதலித்துவந்ததாகவும், இது குறித்து மாணவியிடம் தெரிவித்தபோது, அதனை மறுத்ததாகவும், மேலும், தொடர்ந்து தொந்தரவு செய்தால் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவேன் என மாணவி எச்சரித்ததாகவும், இதனால் மாணவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்ததாக தெரியவருகிறது.

மாணவர்களுக்கு பாதுக்கான சூழலாக கருதப்படும் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து இத்தகைய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் இனி எப்படி அவர்களை நம்பி வெளி உலகத்தில் விடுவது என பெற்றோர்கள் பலர் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!