சீன தலைநகர் பெய்ஜிங்கில் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக 22 வயது இளைஞர் ஒருவர் வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை அருந்தியதால் உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் குளிர்பானத்தை குடித்ததால், அவரது வயிற்றில் வீக்கமும் வாயு தேக்கமும் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. இச்சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 18 மணி நேரத்திற்கு பின் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோகோ-கோலா குடித்த 10 நிமிடத்தில் வாலிபர் உயிரிழப்பு
