Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… பரபரப்பு

திருச்சி கே.கே. நகர் சுப்ரமணியபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஏயேசுதாஸ் (47) இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த லூயிஸ் பிரிட்டோ (20) என்பவர் மது அருந்தியுள்ளார். இது குறித்து ஏசுதாஸ் கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து அவர் கலைந்து சென்றார். இதன் காரணமாக கடந்த 29ம் தேதி லூயிஸ் பிரிட்டோ தாமஸ் மற்றும் சிலர் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஏசுதாஸ் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூயிஸ் பிரிட்டோவை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தாமஸ் பற்றும் சிலரை தேடி வருகின்றனர்

error: Content is protected !!