Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற வடமாநில நபர் காயம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற முயன்ற வடமாநில நபர் காயம்

புதியம்புத்தூரில், கணவரைப் பிரிந்து வசித்து வந்த இளம் தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரைப் போராடி மீட்க முயன்ற வடமாநிலத் தொழிலாளி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசூரியமடை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி மாணிக்கவேல் (35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த மாணிக்கவேல், தனது மகள் சசி (13), மகன் விஷால் (7) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாகப் புதியம்புத்தூர் கீரைத்தோட்டத் தெருவில் குடியிருந்து வந்த அவர், அருகே எம்ப்ராய்டரி தொழில் செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்குச் சமையல் செய்து கொடுத்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணிசெய்யும் இடத்தில் உள்ள ஒரு அறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்ட மாணிக்கவேல், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப் (31) என்பவர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்கப் போராடியுள்ளார். இருப்பினும், மாணிக்கவேல் தீயில் கருகி உயிருக்குப் போராடிய நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற அல்டெப் நஸ்கர்ப்பிற்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அங்கிருந்த சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணிக்கவேல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயின் உடலைப் பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துப் புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!