திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் லூர்து செல்வராஜ் மகன் பிரான்சிஸ் ஜவர்கலால் (56) என்பவருடைய மகளுக்கு எதிரியான சந்திப்பு கருப்பன்துறை இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வைணவப் பெருமாள்(23) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். இதை கேள்வி கேட்ட பிரான்சிஸ் ஜவர்கலால் மற்றும் அவரது மனைவியை வைணவப்பெருமாள் அவதூறு வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை கேள்வி கேட்ட பிரான்சிஸ் ஜவர்கலால் மற்றும் அவரது மனைவியை வைணவப்பெருமாள் அவதூறு வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சந்திப்பு போலீசார் வைணப்பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் பெற்றோரிடம் கத்தி முனையில் கொலை மிரட்டல்-வாலிபர் கைது
