Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி மெய்யப்பன் அந்த மாணவியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்.

சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மெய்யப்பனைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!