Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமியிடம் சில்மிஷம்.. போக்சோவில் கூலித்தொழிலாளி கைது

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் வினோராஜ் (33). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி 3 வயதில் 1 மகன் உள்ளார். வினோராஜ் பக்கத்துஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்ததை சேர்ந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் வினோராஜ்’ வீட்டிலிருந்து ஓடிவிட்டார். சிறுமி அழுது கொண்டே ஓடி வெளியே வந்துள்ளார். சிறுமியிடம் அவரது குடும்பத்தினர் கேட்டபோது சிறுமி அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!