நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் காதில் இருந்த கம்மலை இருவர் திருடும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து, மதன் (25) மற்றும் உமேஷ் (38) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பேரிடர் மற்றும் துயரமான இச்சூழலிலும் மனிதநேயமின்றித் திருட்டில் ஈடுபட்ட நபர்களின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
