Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“போய்ட்டீங்கல்ல.. WHISTLE அடிங்க, VIBE பண்ணுங்க, DANCE ஆடுங்க!” – மதிமுகவை வெளுத்து வாங்கிய எஸ்.எஸ்.சிவசங்கர்

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக குறித்து தேவையற்ற விமர்சனங்களை மதிமுகவினர் முன்வைத்து வருவதாகவும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது என்று கூறி திமுக முன்னாள் அமைச்சரும் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வீடியோ ஒன்றினை வெளியிட்டு மதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியதற்கு, திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரும் வருத்தப்படவில்லை இதில் பெரிய விமர்சனம் செய்யாது கடந்து செல்கிறோம். ஆனால், மதிமுக தரப்பிலிருந்து சிலர் விமர்சனங்களை முன்வைக்கும் போது, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஏதோ திமுக தயவு இல்லாமல், தலைவர் கலைஞரின் தயவு இல்லாமல் வைகோ வளர்ந்தார் என சிலர் பேசுகின்ற செய்தியை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். வைகோவின் வரலாறு தெரியாமல் மதிமுகவில் இருக்கின்ற சிலர் பேசலாம்‌. ஆனால் திமுகவில் இருப்பவர்கள், மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள்.

வைகோ நாடாளுமன்றத்தில் போய் கர்ஜித்த பிறகுதான் வைகோ என்ற அடையாளம் கிடைத்தது. ஆனால், அந்த நாடாளுமன்றத்திற்கு வைகோவை அனுப்பியது யார் எனில்? எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்.அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை. நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக 1978-1990 என ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து அனுப்பி நாடாளுமன்றத்தில் வைகோ பேச தைரியத்தை கொடுத்தது திமுக. தைரியத்தை கொடுத்தது முத்தமிழறிஞர் கலைஞர். ஒரு கட்சியின் தலைவர் தெம்பு இல்லையெனில் எந்த தலைவரும் பேச முடியாது. அந்த தெம்போடுதான் வைகோ பேசி அந்த பெயரை யெல்லாம் பெற்றது. ஆனால், அதற்கு நன்றியாக அவர் மதிமுகவை ஆரம்பித்து, திமுகவை பிரித்தார். அதற்கான பலன்களை தொடர்ந்து, அவர்களே பார்த்துக் கொண்டுள்ளனர்.அதிமுக கூட்டணியிலே, பாஜக கூட்டணியிலே போட்டியிட்டு சிவகாசி தொகுதியிலே வெற்றி வாய்ப்பை இழந்த கதை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். சிவகாசி தொகுதியில் கலைஞரால்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றார். 2019 மீண்டும் எங்களது கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தயவினால் தான் மேலவை உறுப்பினராக மீண்டும் அனுப்பப்பட்டார். எனவே 4 முறை திமுக எந்த சிறு சங்கடமும், தேர்தல் சிரமமும் இல்லாத அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தது. இந்த பதவி எல்லாம் திமுக தயவு தான் வைகோவுக்கு வந்தது. மதிமுக என ஒன்றை ஆரம்பித்து 1996-ல் ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததே அவருக்கு கிடைத்த பரிசு. அவர்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார் என பெரிய HYPE கொடுத்த காலகட்டத்தில், மீண்டும் முத்தமிழ் அளவிற்கு கலைஞர் தான் முதலமைச்சரானார்.எனவே வைகோவின் வரலாற்றை பேசுவதற்கு முன்பு அனைத்தும் திமுகவினருக்கு தெரியும் என்பதை நினைத்து மதிமுகவினர் பேச வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வைகோவின் மிச்ச வரலாற்றை நாங்கள் சொல்வதை விட, மதிமுகவிலிருந்து வெளியே வந்துள்ள மூத்த தலைவர்கள் கேட்டாலே தெரியும். வைகோ பொடோ வழக்கிலிருந்து விடுதலையாக போராடியவர், முத்தமிழறிஞர் கலைஞர். அந்த பொடோ வழக்கில் வைகோவுடன் உடன் இருந்தவர் மரியாதைக்குரிய செவ்வந்தியப்பன், அழகுசுந்தரம், செங்குட்டுவன் அனைவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தங்களை திமுகவில் இணைத்து கொண்டுள்ளனர். இவர்கள் தான் மதிமுகவின் தூண்களாக உடன் இருந்தவர்கள். அன்று மதிமுக துவங்கிய போது யார் இருந்தவர்கள்? இன்று யார் இருக்கிறார்கள்? என்று கணக்கு பார்த்தாலே தெரியும்.

இன்றைய மதிமுகவின் நிலை என்ன என்பது தெரியும். இதற்கு மேலும் பேசினால் வைகோவின் துவக்க காலத்தில் அந்த பயணத்தை துவங்கிய போது, தலைவர் கலைஞர் பேசுகிறபோது மேடையில் காலடியில் அவர் அமர்ந்திருந்த காட்சிகளை நேரடியாக பார்த்த சாட்சிகள் எல்லாம் உள்ளனர். அவர்களெல்லாம் பேச ஆரம்பித்தால், மதிமுகவின் மொத்த வரலாறும் முடிந்துவிடும். ஆகவே மதிமுகவினருக்கு அன்போடு சொல்லிக் கொள்கிறேன். போய்ட்டீங்க விஜய் படத்தை பார்த்துட்டு “விசில்” அடிங்க, மகிழ்ச்சியா இருங்க, “VIBE” ஆகுங்க. அந்த படத்தில் வருகின்ற கேட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் காங்கிரஸ் விஸ்வநாதன் “DANCE” ஆடியதுபோல் நடனமாடி மகிழ்ச்சியாக இருங்கள். தேவை இன்றி திமுகவினரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மதிமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காணொளி வெளியிட்டுள்ளார்.தலைப்புகள் வேண்டும்

error: Content is protected !!