லுங்கியுடன் அமலாபால்.. விவாகரத்துக்கு பிறகு என்ன ஆச்சு?

0
132

தனது திருமண வாழ்க்கை தோல்வி பற்றி  கவலையில்லாத அமலாபால் தற்போது சினிமா துறையில் பிரகாசித்து வருகிறார். விஷ்ணு விஷால், அமலாபால் நடித்து வெளிவந்த ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் நூறாவது நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அமலாபால் தனது அடுத்த படத்தின் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் லுங்கியை மடித்துக் கட்டி பீர் பாட்டிலுடன் இருப்பது போல் உள்ளது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் லுங்கியில் அமலா மிகவும் அழகாக இருக்கிறார் என்றும் சிலர் இதற்கு மாறாகவும் விமர்சித்துள்ளனர். அமலாபால் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘ஆடை’ என்ற படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தின் முதல் போஸ்டர்  மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY