சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேட்டூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நந்தகுமார் (23) என்ற வாலிபர். அவரிடமிருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.1 கிலோ கஞ்சாவை போலீசார்பறிமுதல் செய்துள்ளனர்.
நந்தகுமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (NDPS Act) வழக்குப் பதிவு செய்துள்ள மேட்டூர் போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
