Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 பவுன்-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்லு கடை சந்தில் பரமேஸ்வரி (46) மற்றும் அவரது தாயார் கனகவல்லி, 70, ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று மதியம் 3 மணியளவில் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரி திடீரென வீட்டில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்சியடைந்து வெளியே ஓடி வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த 10 பவுன் நகை, பணம், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!