100% வாக்குப்பதிவு அவசியம் வலியுறுத்தி: கரூரில் மினி மாரத்தான் மூலம் விழிப்புணர்வு.
சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பள்ளி–கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தனித்தனியாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரவிக்குமார் மற்று

ம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி சுங்க கேட் பகுதியில் இருந்து தாந்தோன்றி மலை வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டி காந்திகிராமம் பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி, சுங்க கேட், தாந்தோன்றி மலை வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இந்த மினி மாரத்தான் போட்டிகளில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
100% வாக்குப்பதிவை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

