சென்னை தலைமை செயலகத்தில் இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எப்படி செயல்பட வேண்டும், அரசின் எதிர்ப்பார்ப்பு ஆகியவை குறித்து முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்தும், நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
