கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை குளிப்பதை அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவரும் அவரது நண்பர் ஜெகனும் மிரட்டி, ஆசிரியை மீது தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பணத்தையும் பறித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
