ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ‘போர்’ என்ற அளவுக்கு பெரியதல்ல என்றும், அது தங்களுக்கு ‘ஸ்மால் பொட்டேட்டோஸ்’ போன்ற மிக சிறிய விஷயம் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் ரகசிய அணுசக்தி மையமான ‘பிக்ஆக்ஸ்’ மலை பகுதியின் மீது அமெரிக்கா மிக விரைவில் தாக்குதல் நடத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், டிரம்பின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
