ருமேனியா நாட்டின் கருங்கடல் கடற்பகுதியில், கான்ஸ்டான்டா துறைமுகத்துக்கு கிழக்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது. கொமொரோஸ் நாட்டின் கொடியுடன் சென்ற அந்தக் கப்பலில் உக்ரைன் மற்றும் அஜர்பைஜான் நாடுகளைச் சேர்ந்த 13 பேர் இருந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் விரைந்தனர். மற்றொரு கப்பலின் உதவியுடன் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்; ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்.. ஒருவர் பலி, 3 பேர் மாயம்
