Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ் என்பவரின் மகன் தீரண்பெண்டிக்ட். இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த தீரண் பெனெட்டிக்ட்
பள்ளா அருகில் அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே வெட்டவெளியில் நின்று கொண்டிருந்த மாட்டை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடிரென மாடு அவருடைய நெஞ்சில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார் .இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

error: Content is protected !!