Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை…

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கெளரி வயது 15. இந்த மாணவி பரணம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மலர்க்கொடி வீட்டில் இருந்து அங்கே உள்ள மேல் நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கெளரி அங்கிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!