பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் சேர்ந்த சிவராமன் விவசாயி, இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே செல்லும்போது அங்கே மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்கியவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கோழி கூண்டில் இருந்த சுமார் 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு பிடித்தனர். பின்னர் ஆழியாரில் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.
கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…
