இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. ஆக்., 6ம் தேதி சூறைக்காற்றால் நெடுந்தீவு அருகே குயிநதா கடற்கரையில் ஒதுங்கிய 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கொண்டு சென்றது. 11 பேரின் வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இலங்கை மதிப்பில் தலா ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
