டில்லியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்க நகையை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான iPhone 18 Pro மொபைலை பரிசாக வாங்கியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே iPhone வாங்கித் தருமாறு மனைவி ஆசையுடன் கேட்டதாகவும், அப்போது தன்னிடம் பணம் இல்லாததால் வாங்கித் தர முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது தங்கத்தை விற்று கிடைத்த பணத்தில் மனைவிக்கு iPhone வாங்கிப் பரிசளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
