தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்த ராஜசேகரின் 11 வயது மகள் பிரியதர்ஷினி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதைக் கண்டு வாட்டர் மோட்டாரை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்ட சிறுமி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
