Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதகை மலை ரயில் சேவைக்கு 118 ஆண்டுகள் நிறைவு

உதகை மலை ரயில் சேவைக்கு 118 ஆண்டுகள் நிறைவு

நீலகிரி: UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலுருந்து உதகை வரை முழுமையாக நீடிக்கப்பட்டு 118 ஆண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1899ம் ஆண்டு ஜூன் 15 அன்று மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்பட நீலகிரி மலை ரயில் பின்னர் 1908ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று உதகை வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த வரலாறு சிறப்புமிக்க நாளாய் மலை ரயில் அறக்கட்டளையினர் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இந்தியாவில் உள்ள ஒரே ரேக் மற்றும் பினியன் தொழில்நுட்பத்தில் இயங்கும் மலை ரயில் இதுவாகும். மேலும் இந்த ரயில் 2005ம் ஆண்டு UNESCO அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான 46 கி.மீ தொலைவை தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் 16 குகைகள், 250 பாலங்களைக் கடந்து செல்கிறது. தற்பொழுது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ஒரு முறை மட்டும் இயக்கப்படும் இந்த ரயிலை கூடுதலாக இயக்க வேண்டும், பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!