தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மலைப் பகுதியில் இருந்து வரும் நீரின் அளவு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி, வெள்ளம்போல் பாய்ந்து வருகிறது
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை மற்றும் நீர்வரத்து முழுமையாக சீரடையும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதிக்கு செல்லாதவாறு வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
