கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். சென்னையில் இன்று (அக்.16) பேட்டியளித்த அவர், “வி.எஸ்.பாபுவிடம் தொலைபேசியில் இருமுறை பேசினேன். அவர் தற்போது நலமடைந்து வருகிறார்” என்றார். மேலும், உணவுத்துறை அமைச்சர் அண்மையில் அவரைச் சந்தித்தபோது, அவர் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறினார். வி.எஸ்.பாபு விரைவில் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையையும் ஜேசிடி பிரபாகர் வெளிப்படுத்தியுள்ளார்.
“கொளத்தூர் MLA VS பாபு நலமடைந்து வருகிறார்”… ஜேசிடி பிரபாகர்
