சிவகங்கையின் திருப்புவனம் அருகே கொந்தகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி துக்க நிகழ்விற்காக மதுரை சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 126 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீடு திரும்பிய மகேஸ்வரி கதவு உடைக்கப்பட்டு நகைகளும் பணமும் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
