குதிரைபேரத்தால் அதிமுக MLAகளை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை அதிமுகவுக்கு எதிராக திருப்பிவிட்டு, அவர்களுக்கே மீண்டும் இடைதேர்தலில் வேட்பாளாராக அறிவித்து ஊழல் ஆட்சிக்கு வழிவவை செய்துள்ள தவெக அரசை கண்டித்து – கரூர் மாவட்ட அதிமுக செயற்குழு ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கண்டித்து 7 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சி உட்பட்ட பழனியப்பா தெரு பகுதியில் உள்ள அதிமுக கரூர் மாவட்ட அலுவலகத்தில் இன்று செயற்குழு ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக கரூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் குதிரைபேரத்தால் அதிமுக MLAகளை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை

அதிமுகவுக்கு எதிராக திருப்பிவிட்டு, அவர்களுக்கே மீண்டும் இடைதேர்தலில் வேட்பாளாராக அறிவித்து ஊழல் ஆட்சிக்கு வழிவவை செய்துள்ள தவெக அரசை கண்டித்தும்.
தமிழகத்தில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தினம் தினம் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர், இதை கண்டுகொள்ளாத மக்கள் விரோத தவெக அரசை கண்டித்தும்.
மாண்புமிகு கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டாலின்படி, தாராபுரம்

மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைதேர்தலில் தமிழகத்தின் வெற்றி சின்னம் இரட்டைஇலை சின்னத்தின் 100% வெற்றிக்கு கரூர் மாவட்ட அதிமுக பாடுபடும் வேண்டும்.
தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்க்கி வரும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதை பொருள் புலக்கம் அதிகரிப்பு இப்படி பல பிரச்சினைகளை பொதுமக்கள் தலையில் சுமத்திவிட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி பொதுமக்களின் வரிப்பணத்தில் சொகுசு பயணம் சென்ற தவெக தலைவர் விஜய் அவர்களையும் தமிழக அரசையும் கண்டித்தும்
சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு என அறிவித்துவிட்டு திட்டமிட்டு பல வெட்டி விவாதங்களை முன்வைத்து, தமிழக மக்களை திசை திருப்பி விட்டு, உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தனியார் பல்கலைக் கழக மசோதாவை நிறைவேற்றி, தமிழக அரசு உயர்க் கல்வியிலிருந்து வெளியேறி ஒட்டுமொத்தமாக தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக கல்வித்துறையை காவு வாங்கும் மாணவர்களுக்கு எதிரானா தவெக அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
