Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அழிப்பு…

கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அளித்தனர்: அமராவதி ஆற்றங்கரையில் எரித்ததால் சர்ச்சை.

கரூர் பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா கடந்த 2025 முதல் 2026 வரை 1456 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,456 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பெயரில் அமராவதி ஆற்றங்கரையோரப் பகுதியில் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஏற்கனவே அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தேங்கி, ஆறு மாசடைந்து காணப்படும் நிலையில், ஆற்றங்கரையோரத்திலேயே தடை செய்யப்பட்ட பொருட்களை தீ வைத்து எரித்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களை அழிக்கும் நடவடிக்கையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!