திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காதலிக்க இளம்பெண் மறுத்து வந்த நிலையில் தாயுடன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பல்லடம் நகர் பகுதியில் உள்ள பச்சாபாளையத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி மற்றும் பூவரசி வசித்து வந்துள்ளனர். அதே திண்டுக்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் அக்ஷய் என்பவர் வீடு புகுந்து இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்து திருப்பூர் தெற்குக் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களைக் கைப்பற்றி, கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின்படி, அக்ஷய் குமார் என்ற இளைஞன் பூவரசியை காதலித்து வந்துள்ளார். அக்ஷய் பலமுறை பூவரசியிடம் பேச முயன்றபோதும், பூவரசி அதனைத் தொடர்ந்து தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், வீட்டிற்கு தெரியாமல் பூவரசி -அக்ஷய் செய்துகொண்ட திருமணத்தை அவரது தாய் தனலட்சுமி கடுமையாக எதிர்த்ததால், பூவரசி தன்னோடு வர மறுத்தபோது ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசார் கைது செய்யப்பட்ட அக்ஷய் குமாரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று, கொலைக்கு வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
