கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், ரூ.5 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தராத வெங்கடேஷ், கடன் கொடுத்த பெண்ணை காட்டுப்பகுதி வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். அவரது உறவினர் இளங்கோவும் இதில் உடந்தையாக இருந்தார். மயக்கம் வருவதற்கு முன் பெண் தப்பித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து மீட்டனர். பர்கூர் போலீசார் வெங்கடேஷ் மற்றும் இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை காட்டுக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறல்
