திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வெள்ளைசாமி. செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். மனைவி கமலா (51) இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார். திருமண நிகழ்ச்சியில் நகை அணிவதற்காக தனது வீட்டிலிருந்த 12 பவுன் எடை கொண்ட 3 தங்க செயின், ஒன்றரை பவுன் நெக்லஸ், ஒன்றரை பவுன் மோதிரம் உள்ளிட்ட 15 பவுன் நகைகளை தனது கைப்பையில் ஒரு பாக்ஸில் வைத்துக்கொண்டு டவுன் பஸ் ஏறி காந்தி மார்க்கெட் சென்றார்.
பின்னர் பூ மார்க்கெட்டில் சென்று பூக்கள் வாங்கிக் கொண்டு திருச்சி ரெயில்வே ஜங்ஷன் செல்வதற்காக காந்தி மார்க்கெட் வளைவு அருகில் தனியார் டவுன் பஸ்சில் ஏறினார். பஸ் பாலக்கரை மெயின் ரோட்டில் சென்ற நிலையில் நிலையில் திடீரென்று சந்தேகமடைந்து தனது கைப்பையைத் திறந்து பார்த்தார். அப்போது அந்த பாக்ஸ்க்குள் வைத்திருந்த 15 பவுன் நகை திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு தான் அவருக்கு தெரிகிறது. ஓடும் பஸ்சில் அந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி செய்து விட்டனர். இது குறித்து கமலா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.