இந்தியர்களுடன் நிச்சயதார்த்தம் நடந்தும் விசா பிரச்னையால் திருமணம் தடைபட்டிருந்த 150 பாக்., பெண்கள் இந்தியா வந்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் விசாவை நிறுத்தியதால், 150 பாக்., சிந்தி பெண்கள் இந்தியாவில் தங்கள் புகுந்த வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள சிந்தி ஆன்மிக அமைப்பு எடுத்த முயற்சியை அடுத்து விமான போக்குவரத்துக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.
