Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

கோவையில் 1,500 கடைகள் மூடல் – மருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு !!!

​வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆன்லைனில் கிடைப்பதா? – போலி மருந்துகளை ஒழிக்கக் கோரி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம் !!!

தமிழகத்தில் மருந்து கடைகளில் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை நடைபெறுவதை தடை செய்ய வேண்டும், டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு பொதுமக்கள் மாத்திரைகள் மருந்து கேட்டால் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று மருந்து கடை வியாபாரிகள்  கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. அவை இன்று காலை திறக்கப்படவில்லை.

இதனால் மருந்து கடைகளுக்கு மருந்து வாங்க சென்ற பெருமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கூறும்போது;

தமிழகத்தில்‘ஆன்லைன் மூலம் நடைபெறும் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும், மருந்து விற்பனையில் ஈடுபட்டு உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், போலி மருந்துகளை ஒழிக்க வேண்டும், வலி நிவாரணி, தூக்க மாத்திரைகள், கருக்கலைப்பு மருந்துகளை ஆன்லைன் மூலம் வாங்குவதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மருந்து கடை அடைப்பு போராட்டம் நடக்கிறது.

அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

error: Content is protected !!