Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களூருவில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பள்ளிக்கூடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர். அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று மாநில துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!