Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி கட்டிடத்தில் 16வயது சிறுமி பலாத்காரம்… 4 சிறுவர்கள் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமி உள்ளார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை வைத்து 4 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள்இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை அனைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த நான்கு சிறுவர்களையும் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் அந்த நாலு சிறுவர்களும் சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு சிறுவர்களையும் கைது செய்து தஞ்சை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நாலு சிறுவர்களும் 10,9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.சமீப காலமாக அந்தப் பகுதியில் சிறுவர்கள் போதை மாத்திரை கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிஇது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!