சேலத்தில் லஞ்ச வழக்கில் கைதான இடைத்தரகர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்கம் மற்றும் ரூ.27 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் பெறுவதற்காக குவாரி உரிமையாளர் பிரதாப்பிடம் லஞ்சம் கேட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லஞ்சப் பணத்தில் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கியதாகவும், பிரமாண்ட பங்களா கட்டியதாகவும் கூறப்படுகிறது.
