Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தஞ்சாவூர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, தொட்டிலில் படுத்துறங்கிய கண்ணன், பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த திருக்கோயிலில் ஒன்றாகும். இங்கு ருக்மணி சத்தியபாமா கோதா சமேத ஶ்ரீ நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நவநீதகிருஷ்ணனுக்கு பல்வேறு

திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை
நடைபெற்று விழா தொடங்கியது, 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில்
2 ம் நாளாக இன்று தொட்டில் உற்சவம் நடைபெற்றது, குழந்தை கிருஷ்ணன் தொட்டிலில் படுத்து

உறங்கினார், பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி குழந்தை கிருஷ்ணனை தரிசனம் செய்தனர், இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழா வரும் 14 ந் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது, அதில் வெண்ணைத்தாழி உற்சவம், உறியடி உற்சவம், நாவல் பல லீலை,

காளிங்க நர்த்தனம், மாடு மேய்த்தல், வனபோஜனம், அன்னக்கூட உற்சவம், கோவிந்த பட்டாபிஷேகம், இராச லீலை, மதுரா பிரவேசம் திருக்கல்யாணம், கருட சேவை, ஆகியவை நடைபெற உள்ளன

error: Content is protected !!