தாம்பரம் – மதுரவாயல் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றபோது ஏற்பட்ட விபத்தில், 12-ம் வகுப்பு மாணவனான 17 வயது நரேன் பரிதாபமாக உயிரிழந்தார். சலைத் ராஜ் என்பவர் கார் ஓட்டிய நிலையில், அவருடன் நரேன், அரவிந்த் கேசவ், எபேந்திரன் ஆகிய 3 நண்பர்களும் உடனிருந்து பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் பக்கவாட்டு இரும்பு தடுப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் மாணவன் நரேன் உயிரிழந்த நிலையில், மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கார் விபத்தில் 17 வயது மாணவன் பலி… பரிதாபம்
